×

நீ திரும்ப, திரும்ப சொல்ற… அரசியலமைப்பு மாற்றப்படும் என பாஜவினர் சொல்வது ஏன்? பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி

ஆக்ரா: “அரசியலமைப்பு சாசனம் மாற்றப்படும் என பாஜ தலைவர்கள் சொல்வதற்கு காரணம் என்ன?” என்று பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மக்களவை தொகுதியில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு பாஜ வேட்பாளராக சத்யபால் சிங் பாகேலும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி வேட்பாளராக சுரேஷ் சந்திர கர்தமும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஆக்ராவில் நேற்று நடந்த பிரசார பேரணியில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், “கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது, அரசு தேரவு வினாத்தாள்கள் கசிவால் இளைஞர்களின் அரசு வேலை கனவு சிதைந்தது, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கவே தேர்தல் பத்திரம் திட்டத்தை பாஜ கொண்டு வந்தது” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “முன்பு மோடியின் மன் கி பாத் பற்றி பேசிய பாஜ தலைவர்கள் தற்போது அம்பேத்கரின் அரசியல் சாசனம் மாற்றப்படும் என பிரசாரங்களில் தொடர்ந்து பேசி வருவதற்கு காரணம் என்ன? இது மோடியிடம் மக்கள் கேட்கும் கேள்வி, இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

The post நீ திரும்ப, திரும்ப சொல்ற… அரசியலமைப்பு மாற்றப்படும் என பாஜவினர் சொல்வது ஏன்? பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Akhilesh Yadav ,PM Modi ,Agra ,BJP ,Modi ,Uttar Pradesh ,Agra Lok Sabha ,
× RELATED சொல்லிட்டாங்க…